Breaking
Sun. Nov 24th, 2024

வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழாவின் இரண்டாம் நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் சவேரியான் லெம்பேட் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டார். இதன்போது மன்னார் பாலத்தில் இருந்து பொது மைதான வீதியூடாக பண்பாட்டு பேரணி விருந்தினர்கள் சகிதம் மண்டபத்தை நோக்கிச் சென்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உட்பட பலர் கலந்து கொண்ட நேற்றைய நிகழ்வின் போது இலக்கிய ஆர்வலர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, முதல் நாள் நிகழ்வுகள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது இலக்கியம், இசைத்துறை, இசை நடனம்,சிந்து நடைக்கூத்து, நாட்டுக்கூத்து, நாடகம், பரதநாட்டியம், ஓவியம், கிராமியக்கலை போன்ற துறைகளைச் சோர்ந்த 20 பேர் தெரிவுசெய்யப்பட்டு முதலமைச்சர் விருது மற்றும் பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா சுமார் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் மன்னாரில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.may3

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *