Breaking
Sun. Nov 24th, 2024

(அஹமட் புர்க்கான்,கல்முனை)

அண்மையில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் விடுத்த ஊடக அறிக்கையின் பிரகாரம் மஹிந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 18ம் திருத்தச் சட்டம், திவிநெகும சட்டமூலம் என்பன போன்ற விடயங்களை ஆதரிக்க மஹிந்தவிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் பல கோடிகளை பெற்று ஆதரவு வழங்கிய விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று பிரதியமைச்சர் கூறியிறுந்தார். அந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  அதிஉயர்பீட உறுப்பினர் ஒருவரை, தொடர்புகொண்டு இது விடயமாக கேட்டபோது அந்த உயர்பீட உறுப்பினர்  இந்த உண்மைகளை என்னிடம் கூறினார்.

அவரிடம், அண்மையில் தோம்புக்கண்டத்தில் நடந்த கூட்டத்தில், மஹிந்த ஆட்சியில் 18வது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க பணம் வாங்கப்பட்ட விடயம் பேசப்பட்டதாம் அதன் உண்மைத்தண்மை என்ன என்று கேட்டபோது.

அவர் கூறினார்  அந்த விடயம் பேசப்பட்டது உண்மைதான்;

பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்கள் தனக்கு ஒரு கோடி ரூபா கிடைத்தது என்று ஒத்துக்கொண்டாராம், அதேநேரம் பசீர் சேகுதாவுத், ஹசன் அலி போன்றோரும் பணம் வாங்கியதை ஒத்துக்கொண்டார்களாம்.

ஆனால் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் மட்டும் இந்த பணத்தை நான் பெற்றுக்கொள்ள வில்லை என்று அந்த கூட்டத்திலே சத்தியம் செய்து கூறியது நகைச்சுவையாக இருந்ததாம்,

அதே நேரம் கட்சித்தலைவர் அவர்கள் பணம் வாங்கியது கட்சியின் வளர்ச்சிக்காக என்று கூறினாராம்.  என்றும்  அந்த உயர் பீட உறுப்பினர் கூறினார்.

இதே போன்றுதான் திவிநெகும சட்டமூலத்துத்துக் ஆதரித்து வாக்களிக்கும் போதும் நடந்தது என்றும் பேசப்பட்டது.

ஆனால் இந்த சட்டமூலங்கள் ஜனநாயகத்தை உறசிப்பார்த்த விடயங்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

இப்படி பணத்துக்கு சோரம் போகும் கட்சி,  வடகிழக்கு இணைப்புக்கும்  டயஸ்போராக்களிடம் சோரம் போக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். என்றும் அவர் மிகுந்த மனவேதனையுடன் என்னிடம் கூறி முடித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *