Breaking
Sun. Nov 24th, 2024

(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த வீரக்குட்டி ஜெயராஜ் என்பவரால் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம் பெற்றது.

ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் இயந்திரமானது மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி மனிதவலு மூலம் இயங்கி 150 லீற்றர் நீர்த்தாங்கிக்கு ஏற்றி அதன் பின்பு தானாக இயங்கும் அதாவது பாவனையாளர் அதனை பாவிக்கும் போது சமயலறை குளியலறை அல்லது வேறு இடமோ பாவிக்கும் போது நீர் இறைக்கும் இயந்திரம் தானாகவே சுழன்று நீரை தாங்கிக்கு ஏற்றும் இந்த நீர் இறைக்கும் இயந்திரம் வீட்டுப் பாவனைக்கு மட்டுமின்றி விவசாயத்திற்கும் தோட்ட செய்கைக்கும் பெரும் உதவியாக இருக்கும்.unnamed-4

இந்த நீர் இறைக்கும் இயந்திரம் முதலில் மனிதவலு மூலம் இயங்கியது 2004.11.25ம் திகதி வடக்கு கிழக்கு கைத்தொழில் திணைக்களத்தினால் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் நடாத்தப்பட்ட கைத்தொழில் கண்காட்சியில் மாகாண மட்டத்தில் முதலாது பரிசும் சான்றிதழும் கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜிக்கு வடக்கு கிழக்கு கைத்தொழில் துறை பணிப்பாளரால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.unnamed-1

இவ் நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழில் நுற்பம் 100 வீதம் காட்டப்படாமல் 95 வீதமே காட்டப்படுவதாகவும் 05 வீதம் பாதுகாப்பு கருதி மறைக்கப்பட்டுள்ளது என்றும் மறைக்கப்பட்ட 05 வீத தொழில் நுட்பமானது இவ் நீர் இறைக்கும் இயந்திரத்தை பெற்றுக் கொள்ளும் நிறுவனத்திடம் கூறப்படும் என கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் தெரிவித்தார்.unnamed-2

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *