Breaking
Mon. Nov 25th, 2024

(ஜெமீல் அகமட்)

கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மக்கள் பல பிரச்சினைககளுக்கு முகம் கொடுத்து வந்தனர் அதில் சிறுபான்மை மக்களாகிய தமிழர்கள் பயங்கரவாதம் என்ற போர்வையிலும் முஸ்லிம்கள் சமயம் ,கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மஹிந்தவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சந்தர்ப்பம் பார்த்து இருந்த வேளை தனது பதவியை மீண்டும் உறுதிப்படுத்த ஜனாதிபதி தேர்தலை அறிவித்ததும் சிறுபான்மை மக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். சர்வதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வந்த நிலையில் மிகவும் கவலையுடன் காணப்பட்டவர் தான் இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் ஐயா.

அதாவது தனது அரசியல் வியாபாரத்துக்கு ஏற்ற ஜனாதிபதி தான் மஹிந்த ராஜபாஷச அவர் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் வந்தால் கௌரவம் அரசியல் வியாபாரம் என்பன பாதுக்கப்படும் என்ற சுயநல சிந்தனையோடு மஹிந்த ராஜபாக்சவை ஆதரிக்க முஸ்லிம் சமுதாயத்தையும் கட்சியின் உயர்பிட உறுப்பினர்களையும் திசை திருப்ப பல முயற்சிகள் செய்தார் ஆனால் எந்த முயற்சியும் கை கூட வில்லை.

மஹிந்த ஜனாதிபதியாக வரக் கூடாது என்று முஸ்லிம் சமுதாயம் ஒற்றைக் காலில் நிற்கும் போது மைத்திரி வரக்கூடாது என்று  மறைமுகமாக நாடகம் ஆடி கட்சியின் கூட்டங்களை 17 தடவை நடத்தியவர் தான் இந்த ஹக்கீம் ஐயா என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்

முஸ்லிம்களை பாதுக்கும் கட்சி தலைவர் அன்று முஸ்லிம்களை அழிக்க போட்ட திட்டம் மக்களிடையே எடுபட வில்லை தபால் வாக்களிப்பை மனச்சாட்சிப்படி வாக்களிக்க சொன்ன முதுகெலும்பு அற்ற அரசியல் செய்யும்  ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் மக்கள் புறந்தள்ளி விட்டு மைத்திரியை ஆதரிக்க முடிவு செய்தனர் இது ஹக்கீமுக்கு மிகவும் கௌரவ பிரச்சினையாக இருந்தது மஹிந்த ஐயாவோடு பேசிய அரசியல் வியாபாரத்தை நடைமுறைபடுத்த முடியாமல் மிகவும் சங்கப்பட்ட நிலையில் இருந்தார் இந்த நிலை ஏற்பட கட்சிக்குள் இருந்த அஸ்ரப்பின் அரசியல் சமுதாய சிந்தனைவாதி செயலாளர் ஹசன் அலியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது அதனால் அன்று முதல் ஹசன் அலி ஹக்கீம் முறுகல் உக்கிரமடைந்தது.

மக்கள் மைத்திரியுடன் இருக்கும் போது சமுதாயத்தை பாதுகாக்க முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரிக்க முடிவு எடுக்க  வேண்டும் என்று ஒரே முடிவுடன் ஹசன் அலி இருந்தார் இந்த முடிவுக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் ஹசன் அலியின் முடிவை ஆதரித்தனர் அதனால் ஒன்றும் செய்ய முடியாத ஹக்கீம் பொத்துவிலில் நடைபெற்ற மைத்திரி ஆதரவு கூட்டத்தில் அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டார்  இதே மாதிரி ஒரு குழப்பம் தான் கடந்த மாகான சபை தேர்தலிலும் நடைபெற்றது அப்போது ஹசன் அலியின் முடிவின்படி மரத்தில் தேர்தல் கேக்கா விட்டால் இந்த ஹபீஸ் நசீர் முதல் அமைச்சராக இருக்கமாட்டார் தற்போதும் புள்ளையானே முதல் அமைச்சராக இருப்பார்  என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஹசன் அலி சமுதாயத்துக்காகவும் கட்சிக்காகவும் எடுக்கும் நல்ல முடிவுகள் ஹக்கீமின் அரசியல் வியாபாரத்தை பல தடவை பாதிக்க செய்தது அந்த கோபத்தின் காரணம் தான் இன்று அதிகாரம் கொண்ட தலைவர் என்ற தலைக்கனத்தால் ஹசன் அலியை ஹக்கீம் பழி வாங்குகிரார் என்பது மக்களுக்கு புரியாது.

இந்த ஹசன் அலி இல்லை என்றால்  பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலை வந்து இருக்கும் அதற்கு ஹக்கீம் மறைமுகமாக உதவி புரிந்து இருப்பார் இன்று கூட முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் கிழக்கை வடக்குடன் இனைக்க ஹக்கீம் ஐயா மறைமுகமாக முயற்சி செய்கிறார் எவர் எப்படி போனால் என்ன கிழக்கு மாடுகளை மேய்த்து  நான் பதவிகள் பெற்று எனது அரசியல் வியாபாரம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று நினைத்து அரசியல் செய்யும் ஹக்கீம் ஒரு நாள்   சமுக துரோகி என்ற பட்டத்தை மக்களால் பெற்றுக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *