திவிநெகும திணைக்களத்தினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூர்த்தி காடு (கானகம்) வளர்த்தல் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று மாலை முசலி பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எம்.பிர்தொஸ் அவர்களினால் ஒவ்வெரு கிராம சேகவர் பிரிவுக்கும் தலா இரண்டு கண்டுகள் வீகிதம் கிராம மட்டங்களில் சேவை செய்யும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் வழங்கி வைத்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்பெற்றுக் கொண்டு இருக்கின்ற போதும் இப்போது தான் அதற்கான மரங்கள் கிடைக்கபெற்றுள்ளது. என்றும் இப்படியான மரங்களை நாங்கள் வளர்ப்பதன் ஊடாக எதிர்கால சமூகத்தின் அபிவிருத்திக்கு இந்ந வேலை திட்டம் பாரிய நன்மையாகவும்,பிரயோசனம் உள்ளதாகவும் அமையும் எனவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தில் வெளிகள திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள் எனவும் குறிப்பிடதக்கது.