Breaking
Mon. Nov 25th, 2024

(எம்.ரீ. ஹைதர் அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி  பிரதேச செயலாளர் பிரிவின், புதிய  காத்தான்குடி பதுரியா கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கபூர்  வீதியில் கிழக்கு   மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வீதிக்கொரு நாள் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சித்திட்டம் 2016.09.15ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டு மாவட்டத்தில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் மாகாண சபை உறுப்பினரின் வீதிக்கொரு நாள் எனும் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மக்கள் குறைகளை அவர்களின் இல்லம் நாடிச்சென்று கேட்டறிந்து பல அபிவிருத்தி பணிகளை அரச நிதி மூலமும், தனது சொந்த நிதி மூலமும் வழங்கி வருகின்றார். அந்த வகையில்  கிராமங்கள் தோறும் காணப்படும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்குடனும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வினையும் பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

அந்த வகையில் 13 வது வீதிக்கொரு நாள் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பொதுமக்களின் பிரச்சினைகளாக வாழ்வாதாரம், மலசலகூடம், மின்சாரம், வீதி, மற்றும்  வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு குறைபாடுகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களினாலும், பொது அமைப்புக்களினாலும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் முன்வைக்கப்பட்டன.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு இம்மக்களின் துயரங்களை தெரியப்படுத்தியதோடு, தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு இக்கிராம மக்களுக்கு என்னென்ன சேவையாற்ற முடியுமோ அனைத்தையும் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.unnamed-4

மக்கள் குறை கேட்கும் திட்டத்தில் மாகாண சபை உறுப்பினரிடம் நபர் ஒருவரினால் வீட்டு சுவர் வாயிலுடன் இணைந்ததாக மின் கம்பம் காணப்படுவதாகவும் அதனை சுவரின் வாயிலுடன் இல்லாமல் அகற்றி தருமாறும் மனுவொன்று முன்வைக்கப்பட்டபோது உடனடியாக காத்தான்குடிக்கு பொறுப்பான பிராந்திய மின் அட்தியட்சகரை தொடர்புகொண்டு உரிய இடத்திற்கு வரவழைத்து நிலைமையினை சுட்டிகாட்டியபோது நகரசபையினூடாக எழுத்து மூலம் அறிவிக்குமாறும் அதன் பிற்பாடு இதனை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொய்வதாகவும் மின் அட்தியட்சகர் தெரிவித்தார். மேலும் சில வீடுகளுக்கும் நேரடியாக சென்று அம்மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததோடு, பழுதடைந்த நிலையில் காணப்படும் வீடுகளை திருத்தம் செய்வதற்கும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத்தருவதாகவும் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கருத்து  தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக்…

எமக்கு அதிகாரம் இருக்கும் காலங்களில் மக்களுக்கு எவ்வகையான சேவையாற்ற முடியுமோ அவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். நான் இக்கிராமத்தில் செய்தது நடமாடும் சேவை அல்ல இதன் பெயர் வீதிக்கொரு நாள் 13 ஆவது இடமாக இதனை மேற்கொண்டு வருகின்றேன். காத்தான்குடியின் பல்வேறு  பிரிவுகளிலும், ஏறாவூர், மாவிலங்கு துறை, பாலமுனை மற்றும் கல்குடாவில் காரமுனை, ஆலங்குளம்  என பல கிராமங்களிலும் எனது இச்சேவையினை மேற்கொண்டுள்ளேன். என தனதுரையில் தெரிவித்தார். இந்நிகழ்வில் 166 A பிரிவு கிராம சேவை உத்தியோத்தர், பொது  அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.unnamed-5

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *