(அனா)
வெளியாகியுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சை முடிவுகள் வெளியானதை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திலயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.
ஓவ்வொரு மனிதனுக்கும் தான் கல்வியில் உயர் பதவி கிடைப்பது என்பது இறைவன் அவர்களுக்கு கொடுக்கும் பெரிய கொடைகளுள் ஒன்றகும் அந்த கௌரவத்தினை இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ளான் உங்களுக்குகிடைத்த கௌரவத்தினைக் கொண்டு உங்கள் பிரதேசத்தினதும் உங்கள் சமுகத்தினதும் கல்வி வளர்ச்சிக்கு அதிகம் அதிகம் உழைப்பவர்களாக திகழ வேண்டும்.
கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இப் பரீட்சையில் அவர்கள் சித்தியடைவதற்கு உதவி அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல் இப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் தாங்கள் கடமை புரியும் பிரதேசங்களில் சிறப்புடன் வாழ்வதற்கும் தாங்கள் கடமை செய்யும் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு உழைப்பவர்களாகவும் திகழ வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் பிராத்தித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஓட்டமாவடி கல்வி கோட்டத்தில் இருந்து தெரிவாகியுள்ள மீறாவோடை பதுரியா நகரை சேர்ந்த ஏ.றஹீம் மற்றும் ஓட்டமாவடி சந்தை வீதியைச் சேர்ந்த ஜிப்ரி தாஜூன் நிஸா ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்து செய்தியினை பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.