Breaking
Sun. Nov 24th, 2024
????????????????????????????????????

(ப.பன்னீர்செல்வம்)

மஹிந்த ராஜபக்ஷவின் சிங்கள இனவாதமும் விக்கினேஸ்வரனின் தமிழ் இனவாதமும் சர்வதேசத்தின் தலையீடுகளும் இலங்கையின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு “முட்டுக்கட்டையாகவுள்ளது” எனக் குற்றம்சாட்டும் ஜே.வி.பி. ஐ.நா.வும் அதனோடிணைந்த அமைப்புகளும் எமது விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் அக்கட்சி தெரிவித்தது.

 

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் அதனோடு தொடர்புபட்ட அமைப்புகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி இலங்கை விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

இவ்வாறு உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அரசாங்கம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கால தாமதம் காட்டுவதே இவ்வாறான தலையீடுகளுக்கு ஏதுவாக அமைகிறது.

அண்மையில் காணாமல் போனோர் தொடர்பாக கண்டறியும் அலுவலகம் ஒன்று நாட்டில் ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதுவரையில் அவ் அலுவலகத்தின் நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு சட்ட மூலங்களை நிறைவேற்றிவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் காலந் தாழ்த்துவதனாலேயே ஐ.நா.வும் வேறுநாடுகளும் அமைப்புகளும் எமது விடயத்தில் தலையிடுகின்றன.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் சர்வதேசமும் புலம்பெயர் புலிகளினதும் பிரிவினைவாதிகளினதும் தேவையை நிறைவேற்றுகிறது.

மறுபுறம் இலங்கைக்குள் மஹிந்த ராஜபக் ஷ இதனைப் பயன்படுத்தி சிங்கள இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றார். விக்னேஸ்வரன் தமிழினவாதத்தைத் தூண்டிவிடுகிறார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *