Breaking
Sun. Nov 24th, 2024

(அனா)

திருகோணமலையில் நேற்று (திங்கள் கிழமை) கானாமல் போன இரண்டு சிறுவர்களும் இன்று (13.09.2016) (செவ்வாய்க்கிழமை) மதியம் 11.45 மணியளவில் வாழைச்சேனை பொலிஸில் வாழைச்சேனை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

நேற்று (திங்கள் கிழமை) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் இரவு நேர புகையிரதத்தில் புறப்பட்ட பதினொரு வயது சிறுவனும் ஒன்பது வயது சிறுமியும் கல்லோயா புகையிரத நிலையத்தில் இறங்கி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரத்தில் பயணித்து வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் இன்று (13.09.2016) அதிகாலை 03.30 மணியளவில் இறங்கியுள்ளனர்.

இச் சிறுவர்கள் இருவரும் வாழைச்சேனையிpல் இருந்து பாசிக்குடா கடற்கரைக்குச் சென்று குளித்து விட்டு மீண்டும் வாழைச்சேனைக்கு வரும் வழியில் இவர்களில் சந்தேகப்பட்ட பொதுமகன் ஒருவர் விசாரிக்கவும் தாங்கள் அம்மா அப்பாவுடன் வந்ததாகவும் அவர்கள் புகையிரத நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் புகையிர நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு பார்த்த வேளையில் அங்கு பெற்றோர்கள் இல்லை இவர்கள் தானாகத்தான் வந்துள்ளார்கள் என்று அறிந்து வாழைச்சேனை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள காரியாலயத்திற்கு சென்று அறிவித்து அவர்களது உதவியுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச் சிறுவர்கள் இருவரும் அக்கா தங்கையின் பிள்ளைகள் என்றும் லலித் பியந்த தனுஸ என்ற தரம் 06ல் கல்வி பயிலும் மாணவனின் தந்தை தொழில் நிமித்தம் மெனராகலையில் இருப்பதால் அவருடன் தாயும் சகோதரியும் இருப்பதால் இச் சிறுவன் அமம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

தரம் 04ல் கல்வி கற்கும் யோகராசா ரொசானா என்ற சிறுமி பெற்றோரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பெற்றோரும் மற்றும் பாதுகாவலராக இருந்த அமம்மாவும் அடித்து துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறியதகாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த முறைப்பாட்டில் அச் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். unnamed-3

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *