(கரீம் ஏ.மிஸ்காத்)
அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து அருமைப் புதல்வனை அறுத்துப் பலியிடத் துணிந்த அருமைத் தந்தையினதும்,அருமைத் தந்தையின் ஆணையை அணுவளவேணும் தவறாமல் அறிய உயிரை அர்ப்பணிக்கத் துணிந்த அருமைப் புதல்வனினதும்.தியாக வரலாற்றை உலகறியச் செய்யும், ஈதுல் அல்ஹா – பெருநாளைக் கொண்டாடும்.
எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கும், எனது அரசியல் வாழ்வு உயர் நிலை அடைய அன்று முதல் இன்று வரை எனக்கு ஆதரவளித்த சிறுபான்மை, பெரும்பான்மை சகோதரர்களுக்கும் எனது இதயபூர்வமான ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சியடைகிறேன் .
அதேவேளை இந் நல்நாளில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லாத ஒரு தேசிய ஒருமைப்பாடு, எமது இலங்கை மணி திரு நாட்டில் என்றென்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கையேந்தி பிரார்த்திக்கின்றேன்.