பிரதான செய்திகள்

துணிந்த என்னை ஒன்றும் செய்து விட முடியாது : மஹிந்த சூளுரை

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் பிரிவினைவாதிகளாலோ  பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது. மலேஷியாவில் இலங்கைக்கான தூதுவர் தாக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு விழுந்த அடி என்பதை உணர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ எமக்கோ எவ்விதமான பலனும் இல்லை. ஆகவே அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஒருபோதும் சாத்தியமற்ற விடயமாகும். கட்சி கொள்கை எமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்

ஆசிய அரசியல் கட்சிகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி  மலேஷியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார். இதன்போது  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் யார் ? தலைவர் விரும்புவதும், யாரை ?

wpengine

கம்பஹாவில் பர்தாவுடன் தேர்வு எழுத மறுப்பு! தீர்வினை பெற்றுக்கொடுத்த ஹிதாயத் சத்தார்

wpengine

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை! வீதியில் இறங்கத் தயார்.

wpengine