பிரதான செய்திகள்

மன்னார்-பள்ளிமுனையில் ஹெரோயினுடன் 6 பேர் கைது

மன்னார் பள்ளிமுல்லை பிரதேசத்தில் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹெரோயின் 2.24 கிலோ கிராம்  நிறையுடையது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வு பிரிவினாரின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது  குறித்த 6 பேரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 இலங்கையர்களும் ஒரு இந்தியரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த  ஹெரோயின் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் வவுனியா விசேட போதைபொருள் ஒழிப்புபிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகியாக இலங்கை பெண்

wpengine

ராஜபக்ஷ அரசு சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை அரசு இழக்கநேரிடும்.

wpengine

தொடர் மழையினால் ‘மல்வானையில்’ போக்குவருத்து பாதிப்பு.

wpengine