தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உ.கௌசிகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உ.கௌசிகன் தலைமையில் சென்ற பொலிஸ் சரயன் றிபாட்(5627),பொலிஸ் கொஸ்தபிள்களான பிலிப்ஸ்(89238), றொசான் (40735), றோகித்த(57654), கலபத்தி (33489),மற்றும் பொலிஸ் சாரதி மதுசங்க(80744) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே குறித்த கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் தலைமன்னார் படப்பிடி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தன்வசம் வைத்திருந்த இரண்டு பொதிகளை கொண்ட 3 கிலோ 352கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, தலைமன்னார் கிராமம் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கேரளா கஞ்சா சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதி வய்ந்தது என தெரிவித்த பொலிஸார் குறித்த நபரிடம் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார்.