கடந்த காலங்களில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகளுக்கு கணினிமயப்படுப்படாமையே காரணமென கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் (26-08)ஆம் திகதி காலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் மாலை அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 2015ம் ஆண்டே சதொச நிறுவனம் தனது அமைச்சுக்கு வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தன்னை அழைத்தமை கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விளக்கம் கேட்பதற்கே எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதிக்கு அவரசரக்கடிதம் எழுதியமையானது எனக்கு கடிதம் கிடைக்குமுன்னரே ஊடகங்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து தகவல்கள் கசிந்தமை தொடர்பில் விசாரணை செய்யக்கோரியே என்றும் அவர் குறிப்பிட்டார்.