தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

நாங்கள் வேலை செய்கின்றோம்! பேஸ்புக் பதிவு அமைச்சர்கள் துாங்குகின்றார். பரபரப்பு

இந்தியாவில்,புனேயில் வங்கி ஊழியரொருவர் வெளியிட்ட புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சுவாதி சிதால்கர் என்ற குறித்த பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், தனது கதிரைக்கு பின்னால், கீழே தரையில் அவரது மகன் படுத்து பால் போத்தலில் வாயில் வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்துடன் பதிவேற்றிய பதிவில், தரையில் கிடப்பது எனது மகன் அல்ல, எனது இதயம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னோடு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டான்.

ஆனால், என்னால் விடுமுறை எடுக்க முடியவில்லை. ஏனெனில் வங்கியில் கடன் உதவி சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பான வேலை கொஞ்சம் இருந்ததால் வேலைக்கு வந்துவிட்டேன்.

தரையில் படுத்துக்கொண்டு எனது மகன் பாலை குடித்துக்கொண்டிருக்கிறான், இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எனது பணியை முடித்துவிட்டேன்.

நான் மட்டுமல்ல பணிக்கு செல்லும் பல்வேறு பெண்கள் இதுபோன்று இக்கட்டான சூழ்நிலைகளை சமாளித்துக்கொண்டு தான் தினமும் பணியாற்றி வருகின்றனர்.

நாங்கள் இப்படி பணியாற்றுகையில் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் தூங்கி விழுவது எந்த வகையில் நியாமானது என பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவினை இதுவரையில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Capture

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விரைவில்

wpengine

கிணற்றில் குடும்பப் பெண்ணின் சடலம்!! யாழ் பகுதியில் சம்பவம்.

Maash

அரச ஊழியர்களின் கடன்களை அறவிடுமாறு அரசு கோரிக்கை

wpengine