Breaking
Mon. Nov 25th, 2024

(எம்.ஐ.முபாறக்)

உலகின்  அதி பயங்கரவாத அமைப்பாக இன்று அடையாளங்காணப்பட்டிருப்பது ஐ.எஸ் அமைப்புதான்.இந்த அமைப்பின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்-மனிதக் கொலைகள் எந்தவொரு மனிதனாலும் சகிக்க முடியாத அளவுக்கு கொடூரமானவை.

தூய இஸ்லாத்தைப் பரப்புகின்றோம் என்றும் இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவப் போகிறோம் என்றும் கூறிக்கொண்டு முழுக்க முழுக்க இவற்றுக்கெல்லாம் எதிராகத்தான் இந்த அமைப்பு செயற்படுகின்றது.இதன் அமைப்பின் உண்மையான நோக்கம்-இதன்  பின்னணி தெரியாத ஐரோப்பாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இதில் இணைந்துகொள்கின்றனர்.

2014 உருவான இந்த அமைப்பு சிரியாவின் ஒரு பகுதியையும் ஈராக்கின் ஒரு பகுதியையும் கைப்பற்றி கிலாபத் என்ற பெயரில் சுயாட்சியை பிரகடனப்படுத்தியது.அது தொடர்ந்து சில மாதங்களாக மேலும் பல இடங்களைக் கைப்பற்றி அதன் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கியது.

ஆரம்பத்தில் ஐ.எஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத இரு நாடுகளின் படையினரும் பின்வாங்கத் தொடங்கினர்.பின்பு சுதாகரித்துக் கொண்டு மீளத் தாக்கி இழந்த இடங்கள் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்டனர்.இதன் மூலம் ஐ.எஸ் இற்கு இழப்பு ஏற்பட்டபோதிலும்,அது முழுமையன பலவீனத்தை அவர்களுக்கு கொடுக்கவில்லை.

இந்த ஐ.எஸ் யார்?இதை உருவாக்கியவர்கள் யார்? போன்ற கேள்விகள் உலக அரங்கில் இன்னும் முன்வைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.அமெரிக்காவும் இஸ்ரேலுமே இந்த இயக்கத்தை உருவாக்கின  என்பதே இதற்கான சரியான பதிலாகும்.

இதை அமெரிக்கா உருவாக்கியது என்றால் இதற்கு எதிராக அமெரிக்கா ஏன் யுத்தம் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.இதுதான் அமெரிக்காவின் இராஜதந்திரம்.பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்காவின் செயற்பாடுகளை நினைவுபடுத்திக்கொண்டால் இந்த விவகாரத்தை மிக இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.

உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா அதற்காக பல யுக்திகளைக் கையாண்டு வருகின்றது.அவற்றுள் ஒன்றுதான் அந்தந்த நாடுகளில் பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி அந்த நாடுகளின் ஸ்தீரத் தன்மையை சீர்குழைத்தல்.அந்த பயங்கரவாதக் கும்பலை ஒழித்தல் என்ற பெயரில் அந்த நாடுகளுக்குள் நுழைந்து அந்த நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.

அடிபணிய மறுக்கும் நாடுகளில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி அரசுகளை கவிழ்த்து தனது பொம்மை அரசுகளை நிறுவுதல்.மத்திய கிழக்கில் இந்த இரண்டு செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

அரபு வசந்தம் என்ற பெயரில்-ஜனநாயத்தை நிலைநாட்டுதல் என்ற பெயரில் மக்களை தூண்டி-புரட்சிகளை ஏற்படுத்தி-அவற்றின் ஊடாக அரசுகளைக் கவிழ்த்து-பொம்மை அரசுகளை நிறுவி இப்போது அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது அமெரிக்கா.அரபு வசந்தம்மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட எகிப்து மற்றும் துனீசிய  நாடுகளில் இப்போது இருப்பது அமெரிக்க சார்பு அரசுகள்தான்.

சிரியாவிலும் இதே நிலைமையைத்தான் அமெரிக்க ஏற்படுத்துகின்றது.சிரிய ஜனாதிபதிக்கு எதிராக ஆயுதக் குழுக்களை உருவாக்கி அந்த நாட்டை இப்போது அழித்துக்கொண்டிருக்கின்றது.அந்த வரிசையில்தான் இந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஐ.எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டமைக்கு இதைவிட மாறுபட்ட காரணங்கள் இருக்கின்றன.அதில் ஒன்று இஸ்ரேலின் நீண்ட இலக்கான ‘அகன்ற இஸ்ரேல்’எனும் திட்டமாகும்.பலஸ்தீனை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலை மேலும் விஸ்தரிப்பதே யூதர்களின் நீண்ட காலச் சதியாகும்.

இஸ்ரேலை சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் பலமிழக்கச் செய்கின்றபோது அந்த நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமித்து அகன்ற இஸ்ரேலை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இப்போதுள்ள இஸ்ரேல்கூட இவ்வாறுதான் உருவாக்கப்பட்டது.முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து துருக்கியைத் தளமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த கிலாபதை யூதர்கள் வீழ்த்தியதால் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் பிரிந்து தனித்தனி நாடாக ஆட்சி அமைத்துக் கொண்டன.

துருக்கியின் கீழ் இருந்த பலஸ்தீனும் இவ்வாறே பிரிந்தது;பலமிழந்து.;பலமிழந்த பலஸ்தீனை துண்டாடி அந்த நிலத்தில் யூதர்கள் இஸ்ரேலை அமைத்துக்கொண்டனர்.இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் தைரியத்தை முஸ்லிம் நாடுகள் இழந்திருந்தன.

அந்த நாடுகளில் எல்லாம் யூதர்கள் தேசியவாதத்தை விதைத்திருந்ததாலும் இஸ்ரேல்,அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்களே அங்கு நியமிக்கப்பட்டிருந்ததாலுமே பலஸ்தீனுக்கு எதிரான சதியை-இஸ்ரேலின் உருவாக்கத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை.

முஸ்லிம் நாடுகள் அனைத்தும் கிலாபத்தின் கீழ் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்து அது அமெரிக்காவின் வல்லாதிக்கத்துக்கு சவாலாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இஸ்ரேல் என்றொரு  நாட்டை அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியில் உருவாக்கி அதைப் பலப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

அந்த மத்திய கிழக்கு நாடுகள் பலமடையா வண்ணம்-ஒற்றுமைப்படா வண்ணம் இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.அத்தோடு,மெல்ல மெல்ல அந்த நாடுகளை ஆக்கிரமித்து அகன்ற இஸ்ரேலை உருவாக்கும் திட்டத்தையும் முன்னெடுக்கின்றது.

1967 இல் இடம்பெற்ற இஸ்ரேல் அரபு யுத்தத்தின்போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட சிரியாவின் கொலன் ஹெய்ட்ஸ்,ஜோர்தானின் ஜோர்தான் பள்ளத்தாக்கு மற்றும் லெபனானின் சேபா பண்ணை நிலம் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டு தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது இஸ்ரேல்.அந்தத் திட்டத்துக்கு உறுதுணையாகத்தான் இந்த ஐ.எஸ் இயக்கத்தை உருவாக்கி இருக்கின்றது.

இந்த இயக்கத்தை வைத்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளை பலவீனப்படுத்தும்-அங்கு பேரழிவை ஏற்படுத்தும் சதித் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் அரங்கேற்றி வருகின்றன.

ஐ.எஸ் இயக்கத்தை உருவாக்கிவிட்டு அதற்கு எதிராக யுத்தம் செய்யும் ஒரு இராஜதந்திரத்தை அமெரிக்கா கையாண்டு வருகின்றது.இதன் மூலம் ஏனைய நாடுகள் அமெரிக்காவை சந்தேகிப்பதைத் தடுப்பதும் தொடர்ச்சியான யுத்த நிலைமையின் ஊடாக மத்திய கிழக்கு நாடுகளை பலவீனப்படுத்துவதும் அமெரிக்காவின் திட்டமாகும்.

யூதர்களுக்கு தேவை அகன்ற இஸ்ரேல்;அமெரிக்காவுக்கு தேவை இஸ்ரேலை வைத்து மத்திய கிழக்கு நாடுகளை கட்டுப்படுத்துவது;கிலாபத் ஆட்சி முறையைத் தடுப்பது.இதற்காகவே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐ.எஸ் இயக்கத்தை உருவாக்கினார்.இந்த ரகசியத்தை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இப்போது போட்டுடுடைத்துள்ளார்.

ட்ரம்ப் கூறுவதற்கு முன்பே இந்த ரகசியம் கசிந்துவிட்டது.ஆனால்,அமெரிக்க ஜனாதிபதி வேட்பளரான பிரபல்யமிக்கவரான  ட்ரம்ப் இதைக் கூறியதால் உலகத்தின் கவனம் இதன்பக்கம் திரும்பியுள்ளது.இது மாத்திரமன்றி ஐ,எஸ் தொடர்பான மேலும் பல ரகசியங்கள் கசியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *