(அனா)
மார்க்கத்தின்பால் அழைத்து தினமும் ஐந்து தடவை இறைவனை வணங்கி, வாரத்திற்கு ஒருமுறை ஜூம்ஆத் தொழுது, வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் நோன்பு என்று இறைவனை வணங்கியும் கூட எங்களிடத்திலே மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்ற வீதத்தினரை விட அதை உடைத்தெறிகின்ற நடைமுறை அதிகரித்துச் செல்வதைக் கண்டு கவலையடைகிறேன் என்று கிராமிய பெருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிதெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்கள், பாடசாலைகள் பொது அமைப்புக்கள் என்வற்றுக்கு பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற வேளை அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
வட்டியை எடுத்துக் கொண்டாலும் சரி, போதைவஸ்தை எடுத்துக் கொண்டாலும் சரி மார்க்கம் தவிர்க்க வேண்டும் என்று சொன்ன அத்தனை விடயங்களும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
நான் தழிழ் பிரதேசங்களுக்கு செல்லும் போது அம்மக்களுக்கு சொல்வதெல்லாம் நீங்கள் போதைக்கு அதிகம் அதிகம் செலவு செய்கின்றீர்கள், அதனால் வறுமை ஏற்படுகிறது, சேமிப்பு குறைவடைந்து காணப்படுகினறது என்றுதான். ஆனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் பிரதேசங்களிலேயும் போதை வஸ்துப்பாவனை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனைத்தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று புத்திகளைத்தான் சொல்லமுடியும். இதனைபாவிப்பவர்கள் இளம் வயதிலயே அனைத்தையும் இழக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை வஸ்துப்பாவனையை இல்லாமல் செய்வதற்காக விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஒழுக்கத்துடன் விளையாட்டுக்களில் அதிகம் அதிகம் ஈடுபடுங்கள், போதையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்கள் பாடசாலைகள் மீன் பிடி அமைப்புகள் என பதினைந்து அமைபபுக்களுக்கு பத்து லட்சம் ரூபா பெறுதியில் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.