(எஸ்.றொசேரியன் லெம்பேட்)
கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
நானாட்டான் மோட்டைக்கடை அரசியனர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வுக்கு கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.