Breaking
Sun. Nov 24th, 2024

கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3.6 இலட்சகணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச அளவில்பயங்கரவாதத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் விதி முறைகளை மீறிசெயல்படுவதாக எழுந்த முறைப்பாட்டினையடுத்து கடந்த ஆண்டு முதல் 3.60 இலட்சடுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்தமை உறுதிப்பட்டதையடுத்து சென்ற பெப்ரவரியில் 1.25 இலட்ச கணக்குகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும், 2.35இலட்சம் டுவிட்டர் கணக்குகள் தற்போதுமுடக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3.6 இலட்சகணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

டுவிட்டர் வலைதளத்தை பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவது வன்மையாககண்டிக்கத்தக்கது.

அதுபோன்ற கணக்குகளை வலைதளத்தில் இருந்து நீக்குவதில் டுவிட்டர் உறுதியாகஇருப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *