ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 வது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் பிறந்த சம்மாந்துறையில் “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 ம் திகதி பி .ப .5.00 மணிக்கு சம்மாந்துறை அல் மர்ஜான் மகளீர் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ள “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” நிகழ்வில் பின்வரும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளது.
01. 1986 தொடக்கம் 1994 காலப்பகுதியின் மூத்த போராளிகளுக்கான மகுடம் சூடல்
02. 1986 தொடக்கம் 2015 காலப்பகுதியின் வேட்பாளர்களுக்கான மகுடம் சூடல்
03. 2014/2015, 2015/2016 ஆண்டுகளில் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு.
இன்ஷா அல்லாஹ் “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” நிகழ்வானது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், சம்மாந்துறை அமைப்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் தலைமையில் இடம்பெற உள்ளது.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” நிகழ்வை சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கட்சியின் பிரதியமைச்சர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உரோப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
“மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.