(அனா)
சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி ஆற்றங்கரையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் அன்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது காத்தான்குடி நகர சபை செயலாளர் திரு. J. சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ ஹாபீஸ் நசீர் அஹ்மத் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் விஷேட அதிதிகளாக நகர திட்டமிடல், நீர் வளங்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளர் ULMN. முபீன் (BA), காத்தான்குடி நகர சபையின் முன்னால் தவிசாளர் மர்சூக் அஹ்மத் லெப்பை, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் இல்மி அஹ்மத் லெப்பை, அப்பிரதேச பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்பெருமதிமிக்க நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின்பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ ஹாபீஸ் நசீர் அஹ்மத் அவர்களால் இத்திட்டத்திற்காக ரூபா 4 மில்லியன் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…
மிக குறுகிய காலத்திற்குள் காத்தான்குடி பிரதேசத்தில் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களுக்காக பல கோடி ரூபாய்களை கிழக்கு மாகாண சபையினூடாகவும் மத்திய அரசினூடாகவும் கொண்டுவந்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் இன்று ரூபா 40 லட்சம் செலவில் ஆற்றங்கரையில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கலினை நட்டி அதனை ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வாரம் 6 கோடி 10 இலட்சம் ரூப செலவில் டெலிகாம் வீதியினை முழுமையாக செப்பனிடுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக முயற்சியினூடாக மத்திய அரசிடமிருந்து ஐ ரோட் திட்டத்திற்கூடாக கிட்டத்தட்ட 9000 மில்லியன் ரூபாயினை கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாட்டிக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதோடு. அதனூடக காத்தான்குடி பிரதேசத்திற்கு 6.5 கிலோ மீற்றர் காபெட் வீதி அமைப்பதற்காக செயற்பாட்டினை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2017 மார்ச் மதத்திற்குள் செயற்படுத்த இருக்கின்றோம்.
இன்று நாட்டில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகளுக்கு அடுத்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களின் ஏகபோக பிரதிநிதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இருக்கின்றது. இன்று காத்தன்குடியை பொறுத்தவரையில் மூன்று கட்சிகள் தான் இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி, அதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியல் குழு போட்டியிட்டது.
மேலும் தற்போது முதற்கட்டமாகவே 40 இலட்சம் ரூபா செலவில் இத்திட்டம் விஷேடமாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பூங்கா ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்குப்பின்னர் கௌரவ. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களின் மூலமாக பாரியளவிலான நிதிகளை இதற்கென ஒதுக்கி முற்றுமுழுதாக இப்பூங்காவை விசேடமாக பெண்களுக்கென பிரத்தியோகமனதொரு பூங்காவாக அமைக்க இருக்கின்றோம். என்று தனதுரையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.