(அனா)
கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஎஸ்.அமீர் அலியின் முயற்சியினால் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றான்டு விழாவை முன்னிட்டு கல்லூரியின் அபிவிருத்தி வேலைகளுக்காக என்பத்தைந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவச ஆகியோருடன் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கடந்த (வெள்ளிக்கிழமை) 12.08.2016 நடாத்திய கலந்துரையாடலின் பின் கல்வி அமைச்சினால் என்பத்தைந்து மில்லியன் ரூபா நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.
கல்லூரியின் உள்ளக அரங்குக்காக ஐம்பது மில்லியன் ரூபாவும் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதோடு புதிய பார்வையாளர் அரங்குக்காக முப்பத்தைந்து மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (13.08.2016) பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தேசிய பாடசாலைக்கு சென்று அபிவிருத்தி செய்யப்படவேண்டிய வேலைத்திட்டங்களை பார்வையிட்டதோடு அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு , பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடைபெறவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக பத்து நாட்களுக்குள் திட்ட அறிக்கையை தயாரிக்குமாரும் அபிவிருத்தி வேலைகளை உடனடிக ஆரம்பிக்குமாரும் கேட்டுக் கொண்டார்.