வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2016 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூபா 03 மில்லியன் நிதியில், மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மடு சந்தியில் கிராம மட்ட அமைப்புக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 13-08-2016 சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு ஆசியுரையினை கத்தோலிக்க குருவானவர் வழங்கி ஆரம்பித்துவைத்தார், தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உத்தியோகபூர்வமாக அடிக்கல்லை நாட்டி கட்டிடப்பணிகளை ஆரம்பித்துவைத்தார், நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி, வீதி அபிவிருத்தி திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன், மன்னார் மாவட்ட பொறியியலாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு அங்கு ஏற்கனவே பனை அபிவிருத்தி சபையால் அமைக்கப்பட்டுள்ள பனம்பொருள் விற்பனை நிலையத்திற்கும் விஜயம் செய்து அதனையும் பார்வையிட்டனர்.