இறப்பர் தொழில்துறையினை நவீன மயப்படுத்த நாம் கடினமான சிரமங்களை எதிர்கொள்கிறோம். உலக சந்தையின் நிலைமை, வழங்கல் துறையில் காணப்படுகின்ற தடைகள், தொழில்நுட்பக் குறைபாடு போன்றவை எமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்கு செயற்கை இறப்பர் இறக்குமதி மீதான இடர்பாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொணடு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் அரிந்தம் பாச்சி , இலங்கை பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிறுவனத்தின் தலைவர் எம்.டி. பிரின்ஜிரஸ் மற்றும் உப தலைவர் கவுஷால் ராஜபக்ஷ உட்பட பல பிரமுகர்கள் இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
இம்முறை இத்தொடர் கண்காட்சி அதன் அசலில் இருந்து விரிவடைந்துள்ளது. பொதியிடல் மற்றும் உற்பத்தி துறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம் இக்கண்காட்சிக்கு இணையாக நான்கு நிகழ்வுகள் இவ்வருடம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழில் உரிமையாளர்கள் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்தும் இக்கண்காட்சி தொடரில் கலந்து கொள்கின்றனர். இவ்வாண்டு இக்கண்காட்சியில் இந்தியா, சீனா, தைவான் மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகள் பங்கு பெறுகின்றன.
இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடந்து வலியுறுத்துகைளில்: எமது இறப்பர் தொழில்துறை உற்பத்திக்கு வலுவான கேள்வியுள்ளது. இறப்பர் எங்கள் பிரதான ஏற்றுமதிகளில் ஒன்றாகும். இது உள்ளூர் உற்பத்தி துறையிலும் பயன்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 195 மில்லியன் அமெரிக்க டொலர் இறப்பரை உள்ளூர் உற்பத்திக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எங்கள் அமைச்சின் தகவலின் படி 485 இறப்பர் தயாரிப்பு உற்பத்தியாளர்கள் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர். சிலர் எத்தகைய பதிவுகளும் இன்றி இத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என நம்பப்படுகின்றது. இது எங்கள் இறப்பர் தயாரிப்பு உற்பத்தியினை பாதிப்படைய செய்கிறது. விரைவில் அவற்றை நிவர்த்தி செய்ய தேவையிருக்கிறது, இது தொடர்பில் எனது அமைச்சும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
உண்மையில் அரசாங்கத்தின் இறப்பர் தொழில்துறை மீதான பாரிய பெருந்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இறப்பர் துறையின் ஒட்டுமொத்த 25 பாரிய பெருந் திட்டங்களில் 12 திட்டங்கள் கூட்டுமுயற்சியுடன் செயல்படவுள்ளமை குறித்து எனது அமைச்சு பெருமையடைகிறது. இறப்பர் தொழில்துறை மீதான தகவல் குறைப்பாடு எங்கள் அபிவிருத்தி முயற்சிகளில் ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. நாம் தற்போது தகவல்களுடன் எமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். எனவே இது சம்பந்தமாக தற்போது நாடு தழுவிய ரீதியில் ஆய்வொன்றினை செயல்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க எதிர்பார்க்கின்றோம். மற்றொரு திட்டம் இறப்பர் உற்பத்தி திறன் மீது காணபடுகின்ற பற்றாக்குறை சம்பந்தமானது. வளர்ந்து வரும் இத்தொழில்துறையில் ஒரு திறமையான தொழில்நுட்ப திறன் அறிவு இல்லாமை ஒரு பிரச்சினை உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழில்நுட்ப அறிவு தொடர்பான இந்திய பல்கலைக்கழகத்துடன் இந்த பிரச்சினையினை எனது அமைச்சு, இலங்கை பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தீர்வுகாண வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் ஆராய்ச்சி தொடர்பில் தெற்காசியாவில் பிரபல்யமான, கேரளாவில் அமைந்துள்ள இந்தியா – கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகததுடன் தொடர்பு கொண்டு பயிற்சி தொடர்பான எமது கோரிக்களை விடுத்தோம்.
இப்பல்கலைக்கழகம் சாதகமாக எங்கள் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் விளைவாக எனது அமைச்சு இலங்கையில் இருந்து 25 இறப்பர் தொழில்நுட்ப வல்லுனர்களை நவீன இறப்பர் தொழில்நுட்ப பயிற்சிக்கு எதிர்வரும் மாதம் கேரள அனுப்பவுள்ளது. மற்றொரு முயற்சியாக, பிளாஸ்டிக் மற்றும் இலங்கை இறப்பர் நிறுவனம் 25 மாணவர்களுக்கு இறப்பர் தயாரிப்பு உற்பத்தி திறன் தொடர்பான பட்டப்படிப்பு திட்டத்திற்கு ரூ 3.7 மில்லியன் நிதியினை ஏற்பாடு செய்திருக்கின்றது.
மேலும்; எமது இறப்பர் தயாரிப்பு உற்பத்தித் துறையின் முக்கிய உப பிரிவாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை காணப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மீது காணப்படுகின்ற இடர்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த எமது அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபை நகர்த்தப்பட்டது. கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு இறப்பர் ஊசி மருந்து வடிவமைத்தல் இயந்திரத்தினை கொள்வனவு செய்வதற்கு ரூ 9.4 மில்லியன் முதலீடு மேற்கொள்ப்பட்டது. இத்தொழில்நுட்பம் தாய்வான் இருந்து பெறப்பட்டது. இ;தன் விளைவாக இறப்பர் அச்சு சோதனை உபகரணங்கள் அணுகல் இல்லாமை எதிர்கொண்ட பிரச்சினை நிவர்த்தி செய்யபட்டது. இப்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் தொழிற்சாலைகளினை மிக வேகமாக முன்னோக்கி நகர்த்த முடியும். எதிர்காலத்தில் நாம் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இலங்கை இறப்பர் தொழில்துறையை மேம்படுத்த எதிர்பார்க்கினறோம்.
விலையுயர்ந்த உலோக மற்றும் மர பாவனைக்கு பதிலாக பிளாஸ்ட்டிக்கள் நீடித்த மற்றும் குறைந்த செலவில் காணப்படுகின்றது. இதனை இலங்கையர் பெருகிய முறையில் தினமும் பயன்படுத்தப்படும் உருப்படியாக வருகிறது. இலங்கை தலா 6 கிலோகிராம் பிளாஸ்டிக பயன்படுத்துகிறது. இலங்கையில் வருடாந்த பிளாஸ்டிக் பயன்பாட்டு வளர்ச்சி 20 முதல் 25மூ காணப்படுகின்றது என இலங்கை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். எனவே ஒரு நபருக்கான பிளாஸ்டிக் பயன்பாடு 6 கிலோவை விட மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செலவு குறைவடைவதால் இதனை நுகர்வோர் சந்தையில் கவர்ச்சிகரமான மலிவான விலையினை மேற்கொள்ள முடியும். எனவே இலங்கையில் பிளாஸ்டிக் தொழில் மேலும் வலுவடைய இது ஒரு நல்ல வாய்ப்பாகும.; நீண்ட ஆண்டுகளாக இந்தியா இத்துறைக்கும் ஏனைய துறைகளுக்கு வழங்கும் உதவிகள் விரிவுபடுத்தியுள்ளது இதற்காக நாம் இந்திய அரசிற்கு இலங்கை சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று கூறினார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் அரிந்தம் பாச்சி இந்நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தாவது: வர்த்தகம் உள்ளிட்ட இந்திய-இலங்கை உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், இரண்டு அரசாங்கங்களும் வலுவான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை அனுபவித்து வருகின்றனர். இரு நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஒருவருக்கொருவர் அதிகரித்துள்ளது. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மிகவும் அதிகரித்துள்ளது. நாம் இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மற்றொரு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களினை இந்தியர்கள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகினறது. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் ஆய்வு மற்றும் கலந்துறையாடல்களினை மேற்ககொள்வதற்காக அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து விசேட தூதுக்குழு வரவுள்ளது. அவர்கள் சேவைகள் மற்றும் முதலீட்டு ஒருங்கிணைப்பு நிலைப்பாடு குறித்தும் ஆராய.வுள்ளனர்.
சர்வதேச றப்பர் மற்றும் பிளாஸ்டிக் கண்காட்சி 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனி;ன் ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.