Breaking
Mon. Nov 25th, 2024

(அஹமட் புர்க்கான்)

கல்முனை கரையோர மாவட்ட விடயத்தை பொருத்தவரையில் அது மு.கா சொந்தமான கோரிக்கை அல்ல என்பதை முதலில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உண்மையில் 1978ம் ஆண்டு முன்னை நாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக் காலத்தில் மொறகொட  ஆணைக் குழுவினால் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய அரச கரும தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்காக  பரிந்துரை செய்யப்பட்ட ஒன்று, எனவே இதனை சிங்கள அரசாங்கமே அமுல்படுத்த வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த கரையோர மாவட்டத்தை எப்போது மு.கா தங்களுடைய அரசியல் கோசமாக எழுப்பினார்களோ, அப்போதிலிருந்தே சிங்கள இனவாதிகள் அதை முஸ்லிம்கள் தனிநாடு கோருவதாக என்னி பின்னால் வந்த அரசாங்கங்கள் வழங்கமால் தடுத்தார்கள். என்பதே உண்மை

கரையோர மாவட்டம் என்பது முஸ்லிம்களுக்கான மாவட்டம் அல்ல, அது தமிழ் பேசும் மக்களுக்கான மாவட்டமே- ஆனால் முஸ்லிங்கள் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக வாழுகின்ற காரணத்தால் அதை எமக்கு சாதகமாக பார்க்கிறோமே தவிர வேறில்லை.

கரையோர மாவட்ட விடயத்தில் தமிழர் தரப்பு  முயற்சிக்கா விட்டாலும் எச்சந்தர்ப்பத்திலும் எதிர்ப்பதாக நாங்கள் அறியவில்லை

அத்தோடு கரையோர மாவட்ட விடயத்துடன் வடகிழக்கு இணைப்பு பிரிப்பை இதனுடன் சம்மந்தப் படுத்துவது மகா தவறு,  உண்மையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அன்று தற்காலிகமாக வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெற்ற போதே மர்ஹூம் அஷ்ரப் அதை மிகவும் கடுமையாக எதிர்த்தார்.மட்டுமல்லாது அதனை பாராளுமன்றத்திலும் உரைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரமதாச அவர்களிடம் மர்ஹூம் அஷ்ரப் முன்வைத்த மூன்று அம்சக் கோரிக்கையில் தென்கிழக்கு அளகு என்ற வாசகத்தையே மர்ஹூம் அஷ்ரப் உச்சரிக்கவில்லை மட்டுமல்லாது கரையோர மாவட்டத்தையும் கோரவில்லை.

1994ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் மர்ஹூம் அஷ்ரப் ஆட்சியை தீர்மாணிக்கும் கிங் மேக்கராக இருந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இரவோடு இரவாக சந்திரிக்கா அம்மையாருக்கு ஆதரவு வழங்கிய மர்ஹூம் அஷ்ரப் எதுவித ஒப்பந்தமும் இன்றி அம்மையாரை ஆட்சி பீடம் ஏற்றினார்.  நினைத்திருந்தால் மர்ஹூம் அஷ்ரப் அந்த நேரத்திலேயே கரையோர மாவட்டத்தை எழுதி வாங்கியிறுக்க முடியும். ஆனால் அவர் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை தவற விட்டார்.

இப்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் கூறுவதை போல் அஷ்ரப் தென்கிழக்கு அளகை கோரவில்லை.

இப்போதுள்ளவர்களின் தவறான புரிதலை ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இவர்கள் கருதுவது பிழையானது,

சந்திரிக்கா அம்மையாரின் 1997 ,2000 மாம் ஆண்டுகளின்  தீர்வுப் பொதியின் கதாநாயகனே மர்ஹூம் அஷ்ரப்தான்

அந்த தீர்வுத் திட்டத்தில் தற்காலிகமாக பத்து வருடங்களுக்கு வடகிழக்கு பிராந்தியம் இணைந்திருக்க பட வேண்டும் என்றும் பத்து வருடங்கள் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்ட மக்களிடத்திலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குறிப்பிட்ட காலப் பகுதிக்குல் ஏதோ ஒரு காரணத்தால் சர்வஜன வாக்கடுப்பு நடத்தப்படாமல் விடப்பட்டால் பத்து வருடங்கள் பூர்த்தியானவுடன் வடகிடக்கு மாகாணம் பிராந்தியங்களாக பிரிந்து வடக்கு மாகாணம் வேறாகவும் கிழக்கு மாகாணம் வேறாகவும் இயல்பாகவே பிரிந்து விடும் என்று மர்ஹூம் அஷ்ரப் அந்த தீர்வுத்திட்டத்தில் கேட்டிருக்கிறார்.

கரையோர மாவட்டம் தந்தால் கிழக்கை வடக்குடன் இணைக்க தயார் நிலையில் இருப்பவர்கள்  இந்த எனது கருத்துக்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மர்ஹூம் அஷ்ரப் அந்த தீர்வுத்திட்டத்தில் தென்கிழக்கு அளகு கேட்டிருந்தாரா?
அல்லது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் மாகாண சபை கேட்டிருந்தாரா?

அங்கே அவர் கிழக்கு மாகாண மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என்றுதான் கேட்டு இருந்தார்.

ஆக முஸ்லிகளும், சிங்களவர்கள், பெரும்பான்மையான தமிழர்களும் வடக்கோடு இணைய மாட்டார்கள் என்று மர்ஹூம் அஷ்ரப் திட்டவட்டமாக நம்பி இருந்தார். மர்ஹூம் அஷ்ரப்பின் இந்தக் கோரிக்கையின் மூலம் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றே விரும்பி இருந்தார்.
என்பதை மர்ஹூம் அஷ்ரப்பின் பெயரை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வரலாற்றை திரிவு படுத்தி கரையோர மாவட்டம் என்ற குண்டுமணிக்காக கிழக்கு என்ற கண்மாணிக்கத்தை விற்றுவிடாதீர்கள்.

மர்ஹூம் அஷ்ரப்பின் பெயரை வைத்து எதை நீங்கள் கூறினாலும் இப்போதைய இளைஞர்கள் நம்பி ஏமாந்து விடுவார்கள் என்று என்ன வேண்டாம்.

வரலாறுகளை நாங்களும் கற்று வருகிறோம் தெரிந்தும் வைத்திருக்கிறோம்

எனவே உண்மையை பேசுங்கள் உங்கள் சுயநலத்திற்காக சமூகத்தை காட்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் என கூறிவைக்க விரும்புகிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *