பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் அண்மைக் காலங்களில் அவர் வெளியிட்டு வந்த கருத்துக்கள் குறித்து ஆராய்ந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இது தவிர ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் சம்பந்தமாகன தகவல்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒழுக்காற்று குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

மன்னார் மடு வலய மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய சிவகரன்

wpengine

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

wpengine

உலக வன ஜீவ ராசிகள் தினம் 5ஆம் திகதி உடவலையில் அனுஸ்டிப்பு

wpengine