உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

குஜராத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் பிரிவினரை சந்திக்க மாயாவதி திட்டம்

அகமதாபாத்  – குஜராத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் பிரிவினரை சந்திக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார். குஜராத்தில் கடந்த 11ஆம் தேதி இறந்த பசுவின் தோலை உரித்தாக கூறி  4 தலித்துகள் “பசுக் காவலர்கள்’ என்ற அமைப்பினரால் கடுமையாக  தாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பியது. தாக்குதலுக்குள்ளான நான்கு தலித் பிரிவினரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் கிளப்பியதையடுத்து, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ராஜ்கோட் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நான்கு பேரும் கடந்த வாரம்  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், உடனடியாக அவர்கள் உடல்நலம் மீண்டும் மோசம் அடைந்ததால், அகமதாபாத் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரையும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வரும் 4 ஆம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை குஜராத் மாநில பகுஜன் சமாஜ் கட்சி செயலர் பிரதீப் பார்மர் தெரிவித்தார்.

மாயாவதி தனது பயணத்தின் போது, கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

Related posts

குருணாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் அ.இ.ம.கா உடன் இணைவு…

wpengine

சிம்புவிடம் இருந்து தப்பிய த்ரிஷா

wpengine

காலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி

wpengine