ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இப்போதாவது சந்தோஷமா என்று மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய கேள்வியெழுப்பினார்.
இன்று மேல் மாகாண சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
நாங்கள் 11 ஆண்டுகளாக ராஜபக்ஷக்களுக்கு தான் கடைக்கு சென்றோம். 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எங்களை மறந்து விட்டது.
பசில் உள்ளிட்டவர்களை அருகில் வைத்துக் கொண்டு, ஐதேகவில் இருந்து வந்தவர்களுக்கு நல்ல அமைச்சுக்களை வழங்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கண்டுகொள்ளாமல் இருந்ததார்.
இப்போது பாத யாத்திரை சென்று சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவிடம் நான் கேட்பது, இப்போது உங்களுக்கு சந்தோஷமா என்று எனக் கூறினார்.
அத்துடன், புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பௌத்த மதத்திற்கு கிடைக்க வேண்டிய இடம் எவ்வகையிலும் இல்லாமல் போகாது என்றும், இது தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டபோது அவர்கள் உறுதியளித்ததாகவும் கூறினார்.