(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய யுத்த அனர்த்தத்தின் போது புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கும்புறுமூலை பாசிக்குடா வீதிற்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் (வணப் பகுதியில்) புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.
மேற்படி மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் 231வது இராணுவப் படைப் பிரிவின் மிதி வெடி அகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.