பிரதான செய்திகள்விளையாட்டு

உசேன்போல்டுக்கு நடந்த கொடுமை

2008, 2012-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய ஜமைக்கா தடகள ஜாம்பவான் உசேன்போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ´ஹாட்ரிக்´ தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஜமைக்காவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய உசேன்போல்ட் லண்டனில் இன்றும் (வெளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறும் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

இந்த நிலையில் உசேன்போல்ட் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

எனது தசைப்பிடிப்பு காயம் நன்றாகி விட்டது. தற்போது எந்தவித பிரச்சினையும் இல்லை. ஊக்க மருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊக்க மருந்து பிரச்சினையால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷிய தடகள அணிக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு இருப்பது நியாயமானது என்று நீங்கள் நினைத்தால் அது தான் எனது எண்ணமும் ஆகும்.

விதிமுறை என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். தடகள போட்டியில் ஊக்க மருந்து விவகாரம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த நடவடிக்கை மற்ற வீரர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிகமான பகுதிகள் முடக்கப்படலாம் என இராணுவத் தளபதி

wpengine

இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.

wpengine

சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசை உருவாக்க முயற்சி

wpengine