(அபூ செய்னப்)
நல்லதொரு தலைவன் மக்களுக்காக உழைப்பான், அவன் மனிதாபிமானமுள்ளவனாக இருப்பான், தனது சமூகத்தை நேசிக்கின்ற,அவர்களுக்கு உதவி செய்கின்ற நல்ல மனிதனாக இருப்பான். அவ்வாறான தலைவனை எதிர்காலத்தில் தெரிவு செய்யுங்கள். அதுவே உங்கள் பிரதேசங்களின் அபிவிருத்திக்கும். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஏதுவாக அமையும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜோன் பாஸ்டர் அவர்களின் ஏற்பாட்டில் இருதயபுரம் சிறுமந்தை தேவசபைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்
தேர்தல் காலங்களில் மட்டுமே வந்து போகின்ற அனேகமான தலைவர்களையே நீங்கள் இதுவரை பெற்றிருக்கின்றீர்கள். உங்கள் தேவைகளை உணர்ந்து செயற்படுகின்ற, உங்களை நேசிக்கின்ற, உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கின்ற,உங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவும்,வேலை வாய்ப்புக்காகவும் களத்தில் நின்று செயலாற்றுகின்ற, மனித நேயமிக்க ஒரு நல்ல தலைமையை எதிர்காலத்தில் தெரிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் பிரச்சினைகளையும் இலகுவில் தீர்த்துக்கொள்ள முடியும்.
என்னைப் பொறுத்த மட்டில் நான் சிங்களம்,தமிழ்,முஸ்லிம்,கிரிஸ்
சுமார் நாற்பது ஆண்டு காலமாக ஒரு அணைக்கட்டின் தேவைபற்றியும், அந்த அணைக்கட்டு இல்லாததினால் இந்தப்பிரதேசத்தில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தம் பற்றியும் சொல்கின்றீர்கள். இது இந்தப்பிரதேசத்தில் உங்கள் பிரச்சினையை சரியாக இனங்கண்டு தீர்க்கக்கூடிய ஒரு அரசியல் தலைமை இல்லாமையை புடம் போட்டுக்காட்டுகிறது. இது கடந்த காலங்களில் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்சினையாகும், ஒரு நல்ல அரசில் தலைவன் உங்களிடத்தே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையை நாற்பது ஆண்டுகளாக தீர்க்கப்படாமலே போயிருக்காது. எனவே இந்த விடயத்தில் எதிர்காலத்தில் நல்ல சிந்தனையுடன் செயல்படுங்கள்.
எனது இணைப்பாளர் ஜோன் பாஸ்டரின் கரங்களைப்பலப்படுத்துங்கள். உங்களது பிரச்சினைகளை தீர்க்கின்ற நல்ல நாட்கள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். எனக்கூறினார்.