உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காலிதா ஜியா மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை

பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவர் காலிதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது தாயார் தலைமை வகிக்கும் பங்களாதேஷ் தேசிய கட்சியில் பிஎன்பி-யில் முக்கியப் புள்ளியாக உள்ள அவர், கடந்த 2008-ம் ஆண்டு பங்களாதேஷை விட்டு தப்பி, லண்டனில் வாழ்ந்து வருகிறார்.

சிறை தண்டனையுடன், 2.5 மில்லியன் டாலருக்கு இணையான தொகையையும் அபராதமாக விதித்துள்ளது.

காலிதா ஜியா, ஆட்சியில் இருந்தபோது, அவரும் அந்த அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தார். அப்போது அவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

நண்பனுக்காக திருமண திகதியினை மாற்றிய இர்பான் பதான்

wpengine

சவுதி அரேபியாவின் நிதி ஒதுக்கீட்டில் முசலியில் பள்ளிவாசல் பலகையினை திறந்த மஸ்தான் எம்.பி.

wpengine

அமைச்சரவை அடங்கிய பெயர் விபரம்! ரணில் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

wpengine