பிரதான செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் தகதிவரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசேட விரிவுரைகள் மற்றும் வரிவுரைகள் தொடர்பாக ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தும் செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக  பரீட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  தடைகளை மீறும் பட்சத்தில் குறித்த குற்றங்களை புரியும் தனிநபர் அல்லது கல்வி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பொலீஸ் மா அதிபர் நியமனம்! அரசியலமைப்புக்கு எதிரானது – பசில்

wpengine

மீள்குடியேற்ற நடவடிக்கை! வெளிமாவட்டத்தில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

wpengine

சாமர சம்பத் பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Maash