பிரதான செய்திகள்

இ.போ.ச.பஸ் கட்டணம் 6 வீதத்தினால் அதிகரிக்க உள்ளது.

ஆகஸ்ட் ஆரம்பம் முதல் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நூற்றுக்கு 6 வீதத்தினால் இவ்வாறு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தற்போது ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என, பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையை ஒருபோதும் தனியார்மயப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்

wpengine

செல்லாக்காசான மைத்திரியின் மே தினப் பூச்சாண்டி

wpengine

உயர் தரத்தில் சித்திபெற்ற 5000 பேருக்கு விஞ்ஞானம் ,கணித ஆசிரியர் நியமனம்

wpengine