(அஸார் அஸ்ரா)
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரின் இரட்டை முகம். கட்சியின் இரண்டாம் நிலை பதவியை வகித்துக்கொண்டு, பகலில் முஸ்லிம் காங்கிரஸ்காரன் போன்றும் இரவில் முஸ்லிம் காங்கிரசின் விரோதிகளுடனும் மற்றும் பஸீல் ராஜாபக்சவோடு உறவை வைத்துக்கொண்டு தனது சுயநலத்துக்காக இந்த கட்சியை அழிக்கலாம் என பகல் கனவு காணும் தவிசாளர் அவர்களே!
16 வருடகாலமாக வராத அக்கறை , மூன்று முறை தேசியப்பட்டியல் தந்தும் பிரதி அமைச்சு மற்றும் அமைச்சு தந்தும் குறைந்த பட்ஷம் சொந்த ஊரான ஏறாவூரில் கட்சியை வளர்க்காது, சொந்த பிரதேச சபை தோல்வி அடைந்த போது வராத கட்சி அக்கறை ,வாழ்நாள் பூராக தேசிப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையும் ,பிரதி அமைச்சும் ,அமைச்சும் கிடைக்கும் என்று எண்ணி இருந்த உங்களுக்கு கிடைக்க வில்லை என்பதால் ஏற்பட்டு உள்ளது.
கட்சி பற்றி ஏதும் தெளிவு வேண்டுமாக இருந்தால் அதுக்கான இடம் தான் கட்சியின் உயர்பீடம் அங்கு வந்து பேசாமல் கட்சியின் ஒழுக்க விழுமியங்களை மீறி உயர்பீட உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் காதல் கடிதம் எழுதுவதன் உள்நோக்கம் என்ன ?
வாழ்நாள் பூராக தேசிப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையும், பிரதி அமைச்சும், அமைச்சும் தந்தால் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் நல்லவர் , தரவில்லை என்றாலே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மோசமானவராக மாறிவிட்டார்
கௌரவ தவிசாளர் அவர்களே உங்களுக்கு கட்சி தந்த பதவியை கொண்டு இதுவரை சமூகத்துக்கு என்ன செய்துள்ளீர்கள்?
கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளீர்கள் குறைந்த பட்ஷம் சொந்த ஊரான ஏறாவூரிலாவது கட்சியை வளர்த்தீர்களா ?
நீங்கள் கட்சியை உடைக்க செய்த சதித்திட்டங்கள் எத்தனை ஒன்றா இரண்டா ?
கட்சி எதிர்க்கட்சியில் இருந்த போது தனது சுயநலத்துக்காக கட்சியின் தலைவருக்கு தெரியாமல் பசிலோடு பேசியது யார் ?
18 வது சரத்துக்கு ஆதரவளிக்க கட்சியை கொண்டு சென்றது யார் ?
முஸ்லிம் காங்கிரஸ் வடக்கில் தனித்து கேட்பது என்று முடிவு எடுத்த போது வடக்கை சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர்களை பசிலுடன் சேர்த்துவிட்டது யார் ?
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு எதற்கு தரப்பட்ட நன்கொடை ?
பசிலுடன் சேர்ந்து இந்த கட்சியின் தலைமையை பிடிக்க எடுத்த முயற்சிகள் எத்தனை ?
கடந்த ஜனதிபதி தேர்தலில் கட்சி மகிந்தவை விட்டு வெளியேற முடிவு எடுப்பது என்று இருந்த போது அதுக்கு முட்டுக்கட்டை போட்டு கட்சி தீர்மானம் எடுக்க பிந்தியமைக்கு காரணம் யார் ?
இப்படி பட்டியல் இட்டு சொல்லலாம் நீங்கள் இந்த கட்சிக்கு செய்த சதிகளை இன்று கட்சியின் மீது அக்கறை கொண்டவர் போன்று பாசங்கு செய்யும் நீங்கள் உங்களுக்கு ஏதும் கட்சியோடு சம்மந்தபட்ட விடயங்கள் பேசவேண்டுமாக இருந்தால் காதல் கடிதம் எழுதுவதை விடுத்து கட்சியின் உயர்பீடங்களில் போய் பேசுங்கள் .