Breaking
Mon. Nov 25th, 2024

(கரீம் ஏ.மிஸ்காத் யாழ்ப்பாணத்தில் இருந்து)

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 9 வது மெய்வல்லுனர் நிகழ்வு 14/07/2016 (இன்று) ஆரம்பமானது. இந்நிகழ்வு தொடர்ந்து 05 நாட்கள் இடம்பெறும்.இந் நிகழ்வானது யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது.

இந்த விளையாட்டு மைதானம் இந்திய அரசின் நிதியுதவியுடன், புணரமைப்பு செய்யப்பட்டு, சென்ற மாதம்  எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக  இந்திய துணை தூதுவர் ஸ்ரீமான் ஏ.நடராஜா கலந்துகொண்டார்.

அத்தோடு வடமாகாண கல்வி பணபாட்டலுவல்கள் விளையாட்டுதுறை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் இ. ரவீந்திரன் அவர்கள் வெளிநாடு சென்றிக்கின்றமையால் பதில் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் திரு. சத்தியசீலன்  அவர்கள் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
b9084dea-46d1-4141-98bd-8948bc171d6f

மேலும் தேசியரீதியில் வடமாகாணத்துக்கு புகழை ஈட்டித்தந்வர்களுக்கு பதக்கமும், சான்றிதலும், நினைவுச்சின்னமும்,  இந்திய துணைத்தூதுவர்  சிறிமான் ஏ. நடராஜா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.5c4e106c-4a61-469d-81e1-214aea843b41

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *