யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக குழாய் நீர் கிணறுகளை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
யாழ் மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, 6 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கமைய, சோனக தெரு, புதிய சோனக தெரு மற்றும் வேலனை ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற குடி நீர் தேவையுள்ள 10 குடும்பங்களுக்கு இந்த குழாய் நீர் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.
இதற்கான நிதியினை யாழ் மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யானிடம் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட் கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
நாட்டின் பல பாகங்களில் குடி நீர் பிரச்சினை நிலவுகின்றன. இவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இதற்கான திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கமைய இந்நிதி வழங்கப்பட்டது – என்றார்.
யாழ் மக்கள் பணிமனைத் தவைர் மௌலவி பி.ஏ.எஸ். சுப்யான் கருத்துத் தெரிவிக்கையில்,