உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவையும் ,அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன்- ஹம்ஸா பின்லேடன்

தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த இரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேவி சீல்’ என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

23 வயது மதிக்கத்தக்க ஹம்ஸா பின்லேடன் இந்த வீடியோவில் தோன்றி பேசுகையில், நாங்கள் எல்லோருமே ஒசாமாதான். பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா மற்றும் உங்களது (அமெரிக்கா) ஆணைகளை ஏற்கமறுக்கும் இதர முஸ்லிம் நாடுகள் மீது நீங்கள் செலுத்திவரும் அடக்குமுறைக்காக உங்களை (அமெரிக்க மக்கள்) அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்தி பேரழிவை உண்டாக்குவோமென தெரிவித்துள்ளார்.

 

Related posts

எமது நற்பாசை ஒருபோதும் எமக்கான உரிமையை பெற்றுத் தராது.

wpengine

1982ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு தற்போது நஸ்டஈட்டை பெற்றார் விக்ரமபாகு

wpengine

முஸ்லிம்களின் பிரச்சினை! 9நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடு

wpengine