கொழும்பு தமிழ் சங்கத்தில நேற்று (2) அமைச்சா் மனோ கணேசனை தலைவராகக் கொண்டு இயங்கும் ஜனாநாயக முன்னணியின் பிரதித் தலைவரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர், கவிஞா், தமிழ் வித்துவான் வேலனை வேணியனை 50 வருட கால அரசியல் வாழ்வினை முன்னிட்டு வாழும்போதே வாழ்த்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேசன், கௌரவ அதிதியாக வடக்கு முதலமைச்சா் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்து சிறப்பித்தனா்.
இங்கு உரையாற்றிய வடக்கு முதலமைச்சா் சி.வி. விக்னேஸ்வரன் –
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போதே வாழ்த்துவது சிறந்த நற்பண்பு, ஆனால் எம்மவா்கள் அதுவும் எனக்கு உயிருடன் இருக்கும்போதே ஏதாவது ஒரு கருத்தை நான் முன்வைத்தால் அதனை துாற்றுவாா்கள். கடந்த 70. 80 ஆண்டுகளாக தமிழ்ச் சமுகம் ஒருத்தரையேனும் முன்னேர விடமாட்டாா்கள், மட்டம் தட்டி விடுவாா்கள். ஒரு விடயத்தை முன்னெடுத்தால்அதனை முட்டுக்கட்டை விதித்து விடுவாா்கள். இந்த நிமிடம் கூட கொழும்பு வந்து நான் இங்கு கூறும் விடயத்தினைக் கூட நாளை என்னைப்பற்றி கொழும்பில் பேசியதற்கும் விமா்சனங்களை முன்வைப்பாா்கள்.
வேலனை வேணியன் யாழ் இந்துக் கல்லுாாியில் கற்றவா், இந்தியா சென்று கண்ணதாசனுடன் இணைந்து கண்னதாசன் மன்றம் , கொழும்பு மாநகர சபை உறுப்பினர் , தமிழ் வித்துவான், கவிஞா் எழுத்தாளா், ஹிந்து மத பத்தா், ஜனாநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவா் முற்போக்கு முன்னியின் தலைவா்,அவரது 50 ஆண்டுகள் அரசியல் வாழ்வில் வாழ்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு தானும் வாழ்த்துவதாக தெரிவித்தாா்.
அமைச்சா் மனோ கனேசனின் ஜனாநாயக மக்கள் முன்னணி மலையக மக்களுக்கு மட்டுமல்ல, வடக்கு, கிழக்கு கொழும்பு தமிழ் முஸ்லீம் ்மலயக சிங்கள அனைத்து மக்களுக்கும் அவா் குரல் கொடுத்து வருகின்றாா். அவரது கட்சி சகலரையும் உள்வாங்கி அரசியல் நடவடிக்கைகளை தான் வாழ்த்துவதாகவும் தெரிவித்தாா். அத்துடன் அவா் தமிழ் சிங்கள, ஆங்கில பேச்சுக்களின் விசையை சற்று குறைத்து பேசினால் நல்ல பேச்சாளனாக திகழ்வாா் எனவும் வடக்கு முதலமைச்சா் சி.வி விக்னேஸ்வரன் அங்கு உரையாற்றினாா்.
இங்கு அமைச்சா் மனோ கனேசன் தெரிவிக்கையில்…
எமது கட்சி மலையக மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு கொழும்பில் சத்தியக் கிரகம் நடத்தினோம். அடுத்த நாள் வடக்கில் அமைய உள்ள 2000மில்லியன் ருபா நிதியில் பொருளாதார மையத்தினை வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். அதற்காக அமைச்சரவையிலும், பிரதமா் பேசினேன். அடுத்த நாள் கொழும்பிலேயே தமிழ் முஸ்லீம் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற ஏழை எழிய மக்களது வீடுகளை புளுமொண்டால் பகுதியில் அரசு உடைக்க முற்பட்டபோது அதற்காக ச் சென்று நுாற்றுக்கணக்கான பொலிஸாா், கண்னீா் புகை நீா்ப்பாய்ச்சிதலுக்கு எதிராக முன் நின்று அதனையும் தடுத்து நிறுத்தினோம். இவ்வாறகத்தான் எமது இந்தக் கட்சி சகல இன மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒர் அரசியல் கட்சியாக திகழ்கின்றது.
நான் மக்கள் பிரநிதியாக முதன் முதலில் மாகாண சபை சென்றபோது அதனைக் காண எனது தந்தை இருக்க வில்லை அதற்கு முன்பே அவர் மரணித்து விட்டாா். அதன் பின்பு 2006 – 2009 ஆண்டுக் காலப்பகுதி நாட்டில் பயங்கரமான யுகம். நானும் மரைந்த ரவி ராஜ், மற்றும் லசந்த விக்கிரமதுங்க ஆகியோா் தமிழ் மக்களுக்காகவும் ஜனாநாயகத்திற்கு மாக முன்னெடுத்த எடுப்பில் நான் அன்று மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாளோ கொல்லப்படுவேன் என்று எனது தாய் மன நோய்யினால் பீடிக்கப்ட்டாா். அதன் பின் நான் மீண்டும் பாராளுமன்றம் சென்று அமைச்சராக சென்றதை பாா்க்க எனது தாய் இருக்க வில்லை அதற்கு முன்பே அவரும் காலமாகி விட்டாா், ஆனால் எனது பெற்றோா் ஸ்தாணத்தில் இருந்து இந்த வேலனை வேணியனை நான் காண்கிறேன். அவருக்கு இவ்வாறான ஒரு நிகழ்வினை எமது இளைஞா் முன்னணி ஏற்படுத்துமாறு ஆலோசனை வழங்கினேன்.