(அவதானி)
ஏறாவூர் உசனார் ஜே.பி மனநோயாளி போல உளறுகிறார். ஓட்டமாவடி சந்தைக்கட்டிடம் தொடர்பில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சொந்தமான அதன் உத்தியோகபூர்வமான இணையத்தளத்தில் உசனார் ஜே.பி வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை வேட்பாளர் ஜிப்ரி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்
பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் சேவைகளை மலினப்படுத்த நினைக்கின்ற ஒரு மனநோயாளியே இந்த உசனார் ஜே.பி. என்பவர். கல்குடா தொகுதியின் சிறு பிள்ளை கூட அறியும் ஓட்டமாவடி சந்தைக்கட்டிடத்தை கொண்டு வந்தவர் பிரதியமைச்சர் அமீர் அலி என்று மட்டுமன்றி அதன் திறப்பு விழா நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு கட்சி தாவல் செய்த முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கூட அதனை அந்த விழாவில் கூறியிருந்தார்.
மட்டக்களப்பு மத்திய முஸ்லிம் கல்வி வலயம் உற்பட பல கோடிக்கணக்கான ரூபாய்களுகளுக்கான அபிவிருத்தி பணிகளை முஸ்லிகளுக்கு மட்டுமன்றி சகோதர தமிழ் இனத்திற்கும் செய்து வரும் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களை விமர்சிக்க இந்த அல்லக்கை உசனாருக்கு எந்த தகுதியும் இல்லை.
அடிப்படை அரசியல் அறிவு இல்லாத உண்மைகளை எதுவென்று உணர்ந்து கொள்ள முடியாத உசனார் போன்றோரே இப்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னனி போராளிகளின் வரிசையில் இருப்பது அந்தக் கட்சி மீது பரிதாபத்தை மட்டுமே உண்டு பண்ணுகிறது.
உசனாரை விட கேவலம் இந்த ரமழான் மாதத்தில் மிகப்பெரிய பொய்யை மலிவு விலையில் சந்தைப்படுத்த முயற்சிக்கின்ற சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உத்தியோக பூர்வ செய்தித்தளமான வெளிச்சம் இணையத்தளமாகும். இந்த பொய்யான பரப்புரை அந்த இணையத்தளத்தில் வெளியீடு செய்துள்ளமை அந்த செய்தித்தளத்தின் நம்பிக்கையின்மையையும், தரமான செய்திகளை வெளிக்கொணரும் திறன்னற்ற போக்கையும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
உசனார் போன்ற பஞ்சத்திற்கு பாம்பாட்டும் போராளிகள் தான் முஸ்லிம் சமூகத்தை அடகு வைக்க புறப்பட்டிருக்கும் மனபிராந்தி பிடித்த நோயாளிகள் என்றால் மிகையாது. இந்த பொய்யான அறிக்கை மூலம் சமூகத்தின் மீதான மெய்யான அக்கறையுடன் அபிவிருத்தி பணிகளை மனிதபிமானத்துடன் செய்து வருகின்ற கல்குடாவின் அரசியல் சக்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை ஆட்டங்காண செய்ய முடியும் என வெகுளித்தனமாக செயற்படுவது அவரின் அடிமட்ட முட்டாள் தனத்தை சுட்டி நிற்கிறது. எனக்கூறினார்.