பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் குர்ஆனை அவமதித்து வெறுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு எதிராக 2015ஆம் ஆண்டில் மத விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்தும் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இது மனித உரிமை மீறலாகும் என மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
பொரளை பள்ளிவாசல் உபதலைவர் எம்.எம்.எம். ரிகாஸ், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஊடாக இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது அநுராதபுரத்தில் பொதுபலசேனா அமைப்பின் வேட்பாளர் ஒருவரே குர்ஆனை அவமதிக்கும் வகையில் பேசியதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட பிரிவில் முறைப்பாடு செய்தும் எதுவித விசாரணையும் நடைபெறவில்லையெனவும் தற்போது பொலிஸ் விசேட பிரிவு மூடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.