பிரதான செய்திகள்

அஸ்மின் அயூப்பிற்கு எதிர்ப்பு! ஆளும் கட்சி உறுப்பினர்கள்

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 4 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக மாவனல்ல பகுதியைச் சேர்ந்த அஸ்மின் அயூப் பதவி வகித்து வருகின்றார்.

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை மாற்றி யாழ்ப்பாணத்தில் பிறந்த வேறு ஒரு நபரை நியமிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஸ்மின் அயூப் மீதான கருத்துக் கணிப்பினை முன்னெடுத்தால், ஆளும் கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிரான கருத்தினையே தெரிவிப்பார்கள் என்றும், அந்தளவிற்கு அவர் மீது உறுப்பினர்களுக்கு அதிருப்பதி இருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Related posts

புத்தர் சிலைகளை உடைப்பு! 9 முஸ்லிம்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல்

wpengine

மனைவியினை தாக்கிய கணவன்! 30 ஆம் திகதி விளக்கமறியல்

wpengine

கிராம சேவகர் ஒருவரின் விசித்திரமான உத்தரவு! மக்கள் அவதி (விடியோ)

wpengine