பிரதான செய்திகள்

வலிகாமம் வடக்கு தமிழ் மக்களின் காணிகள் இன்று விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும்பொ து மக்களது மேலும் 263 ஏக்கர் காணிகளில் இன்று விடுவிக்கப்படவுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு இன்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்யாராட்சியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்படி வலிகாமம் வடக்கில் உள்ள ஜே 233, ஜே 234, ஜே 235, ஜே 236, குரும்பசிட்டி கட்டுவன் மற்றும் வறுத்தலைவிளான் ஆகிய பகுதிகளில் உள்ள 263 ஏக்கர் காணிகளே இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, காங்கேசன்துறை தொடரூந்து நிலையமும் மக்கள் பாவனைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் காரணமாக குறித்த பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த பிரதேசத்தில் 26 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதேவேளை விடுவிக்கப்படவுள்ள காணிகளின் சொந்தகாரர்கள் இன்று  காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்துக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

க.பொ.த.சாதாரண விண்ணப்பம் முடிவு

wpengine

குடிநீர் போத்தல் தொடர்பில் புதுச் சட்டம்

wpengine

முஸ்லிம்களின் தலைவன் றிஷாட் பதியுதீன் என்பதை நிருபிக்கும் காலம் இது !

wpengine