Breaking
Sun. Nov 24th, 2024

இன்றைய சம்பவம் எனக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மனதில் மறைத்து வைத்திருந்த விடயம் இன்று முழு நாட்டிற்கும் தெரியவந்துள்ளது. எனவே எனது கணவரிடம் இருந்து எனக்கு விடுதலை வேண்டும் என ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திக்கா மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது தொடர்பில் கவலையடைகின்றேன். இதுவரை காலமும்  பல விடயங்களை மனதில் மறைத்து வைத்திருந்தேன். ஆனால் இன்று முழு நாட்டுக்கும் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இது எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது.

நானும் சில தவறுகளை செய்திருக்கின்றேன். அவ்வாறு தவறுகள் செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கவும் தயாராக உள்ளேன். இந்த சம்பவம் இலங்கையிலுள்ள ழுமு பெண்களுக்கும் ஒரு பாடமாகும்.

நல்ல கணவர் மனைவியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

எனினும் எனது கணவரிடம் இருந்து விடுதலை வேண்டும். என்னை பத்து வருடம் சிறையில் அடைத்தாலும் நான் அடைந்த துன்பங்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும். இதற்கான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் முன்னெடுப்பேன் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *