பிரதான செய்திகள்

வரி அதிகரிப்பு சிகரட் மற்றும் மதுபானம்

சிகரட், மதுபானம் மற்றும் பாம் ஒயில் போன்றவற்றின் வரியை அதிகரிப்பதற்கும், தனியார் சுகாதார சேவை மீதான வெட் வரி வீதத்தை குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

பொருளாதார குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

அதன்படி குறித்த தீர்மானத்தை எதிர்வரும் அமைச்சரவையில் சமர்பித்து அனுமதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இதுதவிர கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களின் பெயர் விபரங்களை கூற முடியாது என்றும், நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, பாராளுமன்றத்திற்கு வருகைத் தராத உறுப்பினர்கள் சிலர் அதில் இருப்பதாகவும் கூறினார்.

இது தவிர மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக்காலத்தை மீண்டும் நீடிப்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பதாகவும், புதிய ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.

Related posts

இரண்டாம் தவணை கணிதப் பாட பரீட்சை வினாத்தாள் கசிவு!

wpengine

ஒட்டுசுட்டான் முன்பள்ளிக்கு மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் வாத்தியக்கருவி அன்பளிப்பு

wpengine

தனியார் நிறுவனம் ஒன்றின் முஸ்லிம் காவலாளி சடலமாக மீட்பு

wpengine