Breaking
Mon. Nov 25th, 2024

(கரீம் ஏ. மிஸ்காத்) 

றோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபத்தில் (10/06/2016) நேற்று மாலை 2:00 மணிக்கு ஆரம்பமான  பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கான தேசிய மாநாட்டில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

டீ.ல்.ஏ. திசநாயக்க தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் 3000 க்கும் மேற்பட்ட பதில் கடமையாற்றும் அதிபர்கள் கலந்துகொண்டனர்.

இம்மாநாடிற்கு  பிரதம விருந்தினராக மேல்மாகண சபை, நகர அபிவிருத்தி  அமைச்சர் லசந்த அலகியவன்ன கலந்து கொண்டார். மற்றும்  வடமேல் மாகாணசபை கல்வி அமைச்சர்,  மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிழ்வில் அமைச்சர் லசந்த அலகியவன்ன  குறிப்பிடும் போது,

பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவது பற்றி ஏற்கனவே!  ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் கொள்கையளவில் உடன்பட்டுள்ளதாகவும், அத்தோடு அனைத்து மாகாணங்களின் முதலமைச்சர்களும் குறித்த நியமனத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

  இது தொடர்பாக கருத்து தெரிவித்த சங்க உறுப்பினர்கள் அடுத்த கூட்டம் நியமனம் வழங்கும் கூட்டமாகவே அமையும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வடமேல்  மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிடுகையில்  பதில் அதிபர்கள், கடமையாற்றும் பாடசாலைகளில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்  எனத் தெரிவித்தார்.

அத்தோடு  வடமாகாண சபையும் ,  பதில் அதிபர்கள்கள் கடமையாற்றும் பாடசாலைகளில்,                    புதிய அதிபர் நியமனம் வழங்க கூடாது என பிரேரணை முன்வைத்திருந்தமை குறிப்டத்தக்கதாகும்.

      
மேலும்   பதில் அதிபர்களுக்கான நியமனம் வழங்கப்பட வேண்டும் என, இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.78f1255a-5b9b-44f6-bbef-686a608145219f88746d-5fcb-4921-a852-71f2c3fceaec

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *