பிரதான செய்திகள்

காலி மேலதிக நகர முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

காலி மேலதிக நகர முதல்வருக்கு எதிராக பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்கு ஒன்றில் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றினாலே, பிரதேச மக்களினால் மேலதிக நகர முதல்வர் கெலும் செனவிரத்தனவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன் காரணமாக கொழும்பு மற்றும் காலி நோக்கி பயணிக்கும் வாகன போக்குவரத்திற்கு, தடல்ல
பிரதேசத்தில் வைத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் தற்போது காலி – கொழும்பு பிரதான வீதி, தடல்லயின் ஊடாக போக்குவரத்திற்கு
ஒழுங்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், காவற்துறைக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் மூலமே குறித்த ஒழுங்கை திறக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

வடக்கில் கடலட்டை பிடிக்க 16ஆம் திகதி அனுமதி! சிலிண்டர் தடை

wpengine

சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை

wpengine

2016 ஆம் ஆண்டு பிரச்சினை! சம்பிக்க நீதி மன்றத்தில்

wpengine