(தமிழ் இணையதளம்)
சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்யச் சென்ற பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரை பிணையில் செல்ல மன்னார் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (7) ஆம் திகதி அனுமதி வழங்கியது.
பொலிஸாருக்கு கடமையின் போது இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குறித்த நபரை கைது செய்த பொலிஸார் மன்னார் நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஐர்ப்படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா குறித்த நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார்.
மன்னார், மல்வத்து ஓயா ஆற்றுப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சட்ட விரோதமாக மணல் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக வன்னி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கு சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்ட போது முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பொலிஸாரின் கடமைகளை செய்ய விடாது இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையிலே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த நபரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.