செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிலாபம் நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவின் வீட்டிற்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (24) அழைக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததே இதற்குக் காரணம்.

இது குறித்து கேட்டபோது, நேற்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் கூறினார்.

இது தொடர்பாக தனது வழக்கறிஞர் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்

Related posts

ஊடகவியலாளர்கள் எவரும் இங்கு வரவில்லை ரணில் கவலை

wpengine

உயர்தர பரீட்சையில் தோல்வியடைந்த பிரபல அரசியல்வாதி

wpengine

கொவிட் தொற்று; குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை!

Editor