Breaking
Mon. Nov 25th, 2024
(கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான்-அப்பாஸி)

கட்டார் வாழ் இலங்கை இந்திய சகோதர சகோதரிகளுக்காக, தமிழ் தஃவா களத்தில் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், ‘உண்மை உதயம்’ இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசிரியருமான அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி கலந்து சிறப்பிற்கும் மூன்று நாள் விஷேட கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் வெள்ளி,சனி ,ஞாயிரு (9,10.11) தினங்களில் மாலை 4:00 மணி முதல் இப்தார் வரை ஹிலால் Gulf Times  பின்னால், Ibdu Taymiya  வீதியில் அமைந்துள்ள CEBS Training Centerரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபியினால்  ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய அடிப்படை அம்சங்களின் தொகுப்பான ‘அல் அகீதா அல்-வாஸிதிய்யா’ என்ற பாடத்திட்டம் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்ச்சியில் குடும்ப சகிதம் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

உங்கள் வருகையை முற்பதிவுகள் செய்வதன்மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள 55781619,55793144 என்ற இலக்கங்களுக்கு  அழைக்கவும்.

குறித்த நிகழ்ச்சியில் பெண்களுக்கான விஷேட ஏற்பாடுகளும், சிறார்களுக்கு பிரத்தியோகமான நிகழ்ச்சிகளும் இப்தார் சகிதம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.a4584caf-8d19-4fe9-b705-509331d17385

மேலும் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி  கலந்து சிறப்பிக்கும் ஏனைய நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் முறையே நாளை தினம் வியாழன் 9-6-2016 அன்று மாலை 9:30 மணியிருந்து 10:30 வரை  விஷேட சன்மார்க்கச் சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி  ஒன்று  எயர்போர்ட் ஏரியாவில் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அசீஸ் கஷ்ஷாபி பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில்  முதன் முறையாக கத்தார் வால் 11-16 வயதுக்குற்பட்ட  இலங்கை சிறார்களுக்கான 4 மாத இஸ்லாமிய கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இங்கு ‘ரமழான் எதிர்பார்ப்பது என்ன’ என்ற தபைப்பில் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி விஷேட உரையாற்றவுள்ளார்கள்.
(பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன).

வெள்ளி (10-06-2016) ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பனார் 4ம் மாடியில் அமைந்துள்ள 3ம் வகுப்பறையில் ‘முஸ்லிம் உம்மத்தின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும்’ என்ற தபைப்பில் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி விஷேட உரையாற்றவுள்ளார்.

‘கேள்வி பதில் நிகழ்ச்சிகள்’ எதிர்வரும்  சனி,ஞாயிறு நாட்களில் (11,12 June ) மாலை 9:30 முதல் 10.30 வரை எயர்போர்ட் ஏரியாவில் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அசீஸ் கஷ்ஷாபி பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

(பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது).
கட்டார் வாழ் உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு SLDC Qatar  அமைப்பு அன்புடன் அழைக்கின்றது.ef02766b-fdf1-4568-a938-6cf5620af58b
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *